”கட்டார் வாழ் விருதோடை சொந்தங்களை ஒன்றிணைத்து எமது பிரதேசத்தின் சமூக நல சேவைகளுக்காக உழைத்தல்” என்ற தொனிப் பொருளில் கட்டார் வாழ் விருதோடையா்களின் சங்கம் நேற்று மாலை 8.00 மணியளவில், கட்டார் வக்ரா, கடற்கரையில் AJM. சன்ஹீா் அவர்களின் ஏற்பாட்டில் விருதோடையின் முதல் பட்டதாரியான MSM. சவாஹிர்(ஆசிரியர்) மற்றும் AM. Ashraf (Finance Manager) ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் வைத்து ஸ்தாபிக்கப்பட்டது.
கட்டார்
வாழ் விருதோடையா்களின் சங்கம் ஆரம்பிப்பதற்கான நோக்கம், எதிர்கால திட்டங்கள், செயற்படவேண்டிய
விதம் போன்ற அனைத்து விடயங்களும் MSM. சவாஹிர் அவா்களின் விளக்கமளிக்கப்பட்டதுடன்,
கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்தா்களினால் பலவிதமான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
மேற்படி
கூட்டத்தின் இறுதியில் 3 வகையான குழுக்கள் அமைத்து கட்டார் வாழ் விருதோடையா்களின் சங்கத்தை
முன்னெடுத்து செல்வதற்கு முடிவு எட்டப்பட்டது.
1. 4 போ் கொண்ட ஆலோசனைக் குழு.
2. 7 போ் கொண்ட நிர்வாகக் குழு.
3. 3 போ் கொண்ட நிதி சேகரிப்புக் குழு.
இரவு 10 மணி வரை நடைபெற்ற மேற்படி கட்டார் வாழ் விருதோடையா்களின் சங்கத்தின் முதல் ஆலோசனைக்
கூட்டத்தில் 30க்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டதுடன் எமது பிரதேசத்தில் அபிவிருத்தியை
மேற்கொள்ள தங்களால் இயன்ற வகையிலான உதவிகளையும் வழங்குவதற்கு வாக்குறுதி அளித்தனா்.