இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அமெரிக்கா நிதியுதவி வழங்கியுள்ளது.
50,000 அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக இலங்கை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உவிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
அத்துடன் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தர்களின் குடும்பங்களுக்கு தமது கவலையை வெளிப்படுத்துவதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கிஷப் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் எதிர்காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
(அத தெரண தமிழ்)