இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
பாதுகாப்பான 497 தற்காலிக இடங்களில் 278,578 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
எவ்வாறாயினும் இலங்கையை பாதிப்படையச் செய்திருந்த அசாதாரண காலநிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவுகள் 24 மணி நேரமும் இயங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.
(அத தெரண தமிழ்)