தேசிய ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கு உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இம்முறை துறை சார்ந்த 27 பாட நெறிகளுக்காக 4 ஆயிரம் பேர் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது