Friday, September 2, 2016

கார முனைக் கிராமத்துக்கு மின்சார வசதி பெற்றுக்கொடுத்த -முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்

கல்குடாவில் இருக்கும் ஒரு சிறிய கிராமமான கார முனைக்கு மின்சார வசதிகள் பெற்றுக்கொடுத்து அதனை மக்களிடம் கையளித்த நிகழ்வு இன்று பகல்  இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியாலும் முதலமைச்சரின் தலையீட்டாலும் வழங்கிவைக்கப்பட்ட மின்சார வசதி அங்கு குடியிருக்கும் மக்களின் பெரும்  எதிர்பார்ப்பாகவும் பல வருட கோரிக்கையாகவும் இருந்த கட்டாயத்தேவையாகும்.


காரமுனை ஜும் ஆப்பள்ளிவாயல் தலைவர் கே.எல்.எம்.அஸனார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் பிரதேச செயலாளர் கோறளைப்பற்று வடக்கு எஸ்.இந்திரகுமார், முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் மின்சார பொறியியலாளர், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.





Disqus Comments