சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்குச் சென்ற 16 பணிப் பெண்கள் தொடர்பில் எந்தவொரு தகவலும் காணப்படாதுள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்து அறிவிக்குமாறும் பணியகம் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளது.
இவர்களைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள்*011-4379328* எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பணியகம் கேட்டுள்ளது.
கடந்த 1993, 2004, 2008, 2009, 2011 ஆம் ஆண்டுகளில் இவர்கள் சவுதிக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாகவும் பணியகம் கூறியுள்ளது.