யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்திலும் விபத்திலும் உயிரிழந்த சம்பவத்தில் பொலிசாரினால் தவறு நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஐpத ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளும் அளவுக்கு அங்கு சூழ்நிலை இருந்ததா என்பது பிரச்சினைக்குறியதாவதுடன் அந்த சந்தர்ப்பத்தில் கொள்ளை திட்டமிட்டவகையிலான தாக்குதல் உயிர் அச்சுறுத்தலுக்கான சந்தர்ப்பமாக இருந்திருக்க முடியாது என்றும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். விசேடமாக அந்த சம்பவத்தை உடனடியாக அறிக்கையிடாமை அந்த பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தவறாகும் இது தெளிவாக ஒழுக்கததை மீறிய செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
150 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே பொலிஸ் மா அதிபர் இந்த விடயங்களை குறிப்பிட்டதுடன் பொலிசாருக்கு அதிகாரங்கன் உண்டு அவற்றை மீறி எவராலும் செயற்பட முடியாது. தேவையான சந்தர்ப்பத்தில் தேவையபன குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என்றும் கூறினார்.
உத்தரவை கருத்திற்கொள்ளாது தப்பிச்செல்லும் வாகனத்தின் மீது பொலிசாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியாது என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் (23.10.2016) தெரிவித்திருந்த கருத்து தொடர்பாகவே பொலிஸ் மா அதிபர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குறே நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் உத்தரவை கவனத்திற்கொள்ளாது வாகனம செல்லும் போது அதன்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்வதற்கு பொலிசாருக்கு அதிகாரமில்லை என்று தெரித்தித்திருந்தார்.