Wednesday, October 26, 2016

ஓமான் நாட்டில் 1500 ரியால்களுக்கு இலங்கை பெண்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம்.

இலங்கை, நேபாளம், இந்தியா பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆபிரிக்க நாடுளைச் சோ்ந்த 
வீட்டுப் பணிப்பெண்களை ஓமானில் 1500 ரியால்களுக்கு விற்பனை செய்யும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டைம்ஸ் ஒப் ஓமான் என்ற செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளது.

பொதுவாக ஓமானை பொறுத்தவரையில் வீட்டுப்பணிப்பெண்களை நாட்டுக்குள் அழைத்து வருவதற்கு உரிய சட்டமுறைகள் உள்ளன.

எனினும் அதனை மீறி ஒமானில் பெண்கள் சட்டவிரோதமாக வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு மாதாந்த சம்பளமாக 80 ரியால்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றன.

அனுபவம் வாய்ந்தவர்களுக்கு 100 முதல் 120 ரியால்கள் வழங்கப்படுகின்றன என்றும் ஓமானிய
டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
Disqus Comments