Wednesday, October 26, 2016

முஸ்லிம் விவாக மற்றும் விவாரத்துச் சட்டத்தை மீள்திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட குறித்து யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இஸ்லாமிய விவாக சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் குறைந்த வயதெல்லை மற்றும் அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய சில விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி இவை தொடர்பில் ஆராய்ந்து முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களுக்கான யோசனைகளை அமைச்சரைவக்கு முன்வைப்பதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments