(MN) இரண்டு இலங்கையர்கள் உட்பட மூன்று பேர் பூர்ஜ் அல் அராப் அருகே உம் சுகீம் கடற்கரையில் இவ்வார இறுதியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துபாய் போலீஸ் உறுதி செய்துள்ளது.
கடல் வழக்கத்திற்கு மாறாக மோசமான அலைகளை கொண்டுள்ளது யாரும் நீந்தி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் எச்சரித்த போதும், இவர்கள் தனித்தனி சம்பவங்களில் மூழ்கி இறந்ததுள்ளனர்.
மூழ்கும் போது காப்பாற்ற எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை எனவும் இலங்கையில் இருந்து இரண்டு பேர் மற்றும் இந்தியாவில் இருந்து ஒருவர் எனவும் தெரிய வருகிறது.
அதே கடலில் வெள்ளிக்கிழமை, 24 வயதான எகிப்தியர் மூழ்கி காப்பாற்றப்பட்ட அதேவேளை, அவரது நண்பர், 20 வயது சோமாலியர் மூழ்கி இறந்துள்ளார் .
உயிரிழந்த இலங்கையர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.