அரச மருத்துவமனைகளில் 34 ஆயிரம் தாதியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கை தாதியர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில், இவ்வாறு காணப்படும் வெற்றிடங்களை உடன் பூர்த்தி செய்யாதுவிடத்து சுகாதாரதுறை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும் எனவும் அவர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.