நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் மூன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தலுபொத்த – பல்லன்சேன பகுதியிலுள்ள சிறைச்சாலையில் திருட்டு மற்றும் பல்வேறு குற்றச்செயல்களைப் புரிந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகளே தப்பிச் சென்றுள்ளனர்.
இங்கு 257 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கவனயீனமே இதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.