நீர்கொழும்பு, பிடிபன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள், கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இரண்டு பொலிஸாரும் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 39 மற்றும் 32 வயதுடைய நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் காரின் சாரதி நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.