Sunday, October 16, 2016

அக்கரைப்பற்றில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!

நேற்று மாலை அக்கரைப்பற்று ஆலிம் நகர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பஸ் சில்லுக்குள் சிக்குண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வாகன விபத்தில் உயிரிழந்தவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என அக்கரைப்பற்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து பொத்துவில்  நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸை நிறுத்தி ஏற முயன்றபோதே தவறி வீழ்ந்து பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments