Saturday, October 15, 2016

மன்னா் இறப்பை முன்னிட்டு தாய்லாந்தில் ஒரு வருடத்திற்கு துக்க தினம் அனுஷ்டிப்பு

தாய்லாந்து மன்னர் பூமிபோல் காலமானதைத் தொடர்ந்து அங்கு ஒரு வருடத்திற்கு துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1946 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் அரியணை ஏறிய பூமிபோல் அதுல்யாதேஜ், 70 வருடங்கள் தாய்லாந்தின் மன்னராகத் திகழ்ந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை அவர் காலமானார்.
இதையடுத்து, நாடு முழுவதும் ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் ஒரு மாத காலத்திற்கு அனைத்து அரச நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆடம்பரமான கேளிக்கை நிகழ்ச்சிகள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மன்னர் பூமிபோல் காலமானதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசர் மஹா வஜ்ர அலங்காரனுக்கு (64) முடிசூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், முடிசூட்டும் நாள் குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை.
அடுத்த அரசர் அரியணையேறும் வரை, முன்னாள் பிரதமர் பிரேம் தின்சுலாநந்தா (96) இடைக்கால அரசராகப் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments