Tuesday, October 25, 2016

கைதுசெய்யப்பட்ட பாலித ரங்கே பண்டாரவின் மகனும் சாரதியும் பிணையில் விடுதலை


விபத்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் மற்றும் சாரதிக்கு ஆனமடுவ நீதவான் ஜனனி எஸ் விஜேதுங்க பிணை வழங்கியுள்ளார். 


ஒவ்வொருவருக்கும், 15,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப்பிணையும் வழங்கப்பட்டுள்ளது. 



நேற்று இரவு, ஆனமடுவ - குருணாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஆனமடுவ, வடிகமன்காவ பிரதேசத்தைச் சேர்ந்த தென்னகோன் முதியன்சலாகே காமினி வண்ணிநாயக்க என்பவர் உயிரிழந்திருந்தார். 



பின்னர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் மற்றும் சாரதி ஆகிய இருவரும் ஆனமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 



விபத்து இடம்பெற்றபோது வாகனத்தை செலுத்திச் சென்றது தானே என்று சாரதியான நிலன்த பிரதீப் ரணதுங்க ஏற்றுக் கொண்டுள்ளார். 



குறித்த வழக்கு டிசம்பர் 05ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 
Disqus Comments