கொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவாக்காட்டு பகுதியில் கொட்டுவதற்கு தங்களது எதிா்ப்பைக் காட்டுவதற்காக ஏற்பாடு செய்யபட்ட எதிா்ப்பு ஆா்ப்பாட்டம் இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடா்ந்து புத்தளம் நகரில் இடம்பெற்றது. மேற்படி எதிா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், ஊா்பிரமுகா்கள், நலன்விரும்பிகள், மற்றும் பொதுமக்கள் என பல்வகைப்பட்டவா்கள் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.








