Friday, October 25, 2013

மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்தவருக்கு 8 கோடி நஷ்ட ஈடு : இந்திய உச்சநீதி மன்றம்

மருத்துவர்களின் கவனக்குறைவினால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு 6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரியும் இந்தியரான குணால், தனது மனைவியுடன் 1998 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். அப்போது அவரது மனைவியை மருத்துவ சிகிட்சைக்காக ஏஎம்ஆர்ஐ  மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிட்சையின் போது மருத்துவர்களுடைய அலட்சியத்தால், குணாலின் மனைவியை அபூர்வமான சரும நோய் தாக்கியதில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிகிட்சை அளித்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குணால் நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.  இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ரூபாய்  1 கோடியே 70 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குணால், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், "குணாலின் மனைவிக்கு சிகிட்சை அளித்ததில் கவனக்குறைவாக இருந்த மருத்துவர்கள் 3 பேர் தலா 25 லட்சமும், மருத்துவமனை நிர்வாகம்  ரூபாய் 5 கோடியே 10 லட்சமும் 15 நாட்களில் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
Disqus Comments