Monday, November 4, 2013

திருமண விருந்தில் துப்பாக்கி சூடு: மணமகன் உட்பட 30 பேர் பலி

நைஜீரியாவில் திருமண விருந்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவல் ‘போஹோ காரம்’ என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். வடமேற்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ உள்ளிட்ட மாகாணங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இப்பகுதியில் வாழும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று போர்னோ மாகாணத்தில் திருமண விருந்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்கினார்கள். அப்போது விருந்தில் பங்கேற்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

அதில் மணமகன் உள்பட 30 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பாமா மற்றும் பங்கி நகருக்கு இடையேயுள்ள ஒரு கிராமத்தில் நடந்தது.

இச்சம்பவத்துக்கு போகோ ஹாரம் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இப்பகுதியில் உள்ள தமத்ரு நகரில் பொலிசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் பலர் உயிரிழந்தனர்.
Disqus Comments