Friday, November 8, 2013

மசகு எண்ணெய் இன்மையால் சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது

(TM) சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்  இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் மூடப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

மசகு எண்ணெய் கப்பல் வருகைதராமையினால் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று தெரிவித்துள்ள எரிப்பொருள் கூட்டுத்தாபனம் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியமையினால் உள்ளூரில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Disqus Comments