Tuesday, November 19, 2013

கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் பதவியேற்பு

கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இன்று உத்தியோக பூர்வமாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.புதிய மேயரின் பதவியேற்பையொட்டி கல்முனை மாநகரம் பெருவிழா கோலம் பூண்டிருந்தது.
 
 
புதியமேயர் நிஸாம் காரியப்பர் கல்முனைக்குடி ,சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல்களில் இடம் பெற்ற விசேட தூஆ பிரார்த்தனைகளில் கலந்து கொண்ட பின் கல்முனை மாநகர சபை பணிமனை வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், பெருந்தொகையான பொது மக்கள், இளைஞர்கள் புடைசூழ பெரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மேயர் நிஸாம் காரியப்பருக்கு வழி நெடுகிலும் மக்கள் மாலை அணிவித்தும் பூச் சொரிந்தும் வரவேற்பளித்தனர்.
 
பின்னர் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். 
 
இதனைத் தொடர்ந்து மாநகர சபை வளாகத்தில் முதல்வரை வரவேற்கும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. 
 
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் அப்துல் மஜீத் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், மதப் பெரியார்கள், வர்த்தகர்கள்இ பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
 
Disqus Comments