அம்பாறை
மாவட்டம் நிந்தவூரில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களின்
பின்னணியில் நீலாவணை விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றும் சில
அதிரடிப்படையினரே சம்பந்தப்பட்டுள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலில்
பிரதேசவாசிகளினால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்
ஒருவரை அதிரடிப்படையினர் மீட்டுச் சென்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு
நிந்தவூர் பிரதேசத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த
நிலைமை மேலும் உக்கிரமடையும் முன்னர் அதில் தலையிட்டு தீர்வு காண்பது
அவசியம். மேற்படி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பிரதேசத்தில் ஐக்கியமும்
அமைதியும் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால்
உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதம்
ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.