Saturday, November 9, 2013

இலங்கையின் முதலாவது கணினி உற்பத்தி நிறுவனம் சூரியவெவவில் நேற்று திறப்பு

இலங்கையின் முதலாவது கணினி உற்பத்தி நிறுவனம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் நேற்று (08) திறந்து வைக்கப்பட்டது.

'எமக்கு எம்முடைய கணினி' என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதியின் யோசனையின் பிரகாரம் சர்வதேச தரம் கொண்ட வகையில் இந்த நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை ஆசியாவின் தொழில்நுட்ப கேந்திர நிலையமாக உருவாக்கும் தேசிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் திறப்பு விழாவில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மஹிந்த அமரவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Disqus Comments