Saturday, November 9, 2013

சுற்றுலா சென்ற பஸ் விபத்து: மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில்

(ADA) எப்பாவல, கடியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியினால் பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பஸ் பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சுற்றுலா சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Disqus Comments