மட்டக்களப்பு - கோட்டைமுனை பகுதியில் உள்ள பள்ளிவாசலின் உண்டியலை உடைத்துக்
கொள்ளையிட முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (03) பிற்பகல் 2.00 மணியளவில் கோட்டைமுனை வாவிக்கரை அருகில் உள்ள அவுலியா பள்ளிவாசலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமையான நேற்று பள்ளிவாசல் தொழுகைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ஒருவர் இரும்பு உழிகொண்டு உண்டியலை உடைத்து கொள்ளையிட்டு பணத்தினை பைகளுக்குள் இட்டுக்கொண்டிருந்தபோது, பள்ளிவாசலில் கடமையாற்றும் ஒருவர் இவரை மடக்கிப்பிடித்துள்ளார்.
இவ்வாறு பிடிக்கப்பட்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களினால் பிடிக்கப்பட்டவரை அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றதுடன் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் பள்ளிவாசல்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.