புதிதாக நிர்மாணிக்கப்படும் மதஸ்தலங்களுக்கு புத்த சாசனம் மற்றும் மத
விவகார அமைச்சின் எழுத்து மூல அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று
அவ்வமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.பீ.திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், தியான நிலையங்கள், ஜெப நிலையங்கள் ஆகியவை எவ்வித தர நிர்ணயங்களும் இன்றியும் அனுமதி இன்றியும் பரவலாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அரச மரம், சிலைகள், தர்மச் சக்கரம் மற்றும் சிலுவை போன்றனவும் இதில் உள்ளடக்கப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டு, இந்த நிலைமை மத ஒற்றுமைக் கோட்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்' என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த அனுமதி தொடர்பாக 2008ஆம் ஆண்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பிலும் மேற்படி அறிக்கையில் நினைவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.