இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களில் இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அரசாங்க உத்தியோகத்தர்களும் சில நிபுணர்களும் உள்ளடங்கவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அநோமா திஸாநாயக்க தலைமையின் கீழ் இயங்கும் மேற்படி அமைப்பின் புலனாய்வு பிரிவினரே இவ்வாறு 6 பேரை கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,
'இதுவரை 2000 பேர், இணையத்தளங்களின் மூலமாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்துள்ளனர்.
இணையத்தளங்களுக்கூடாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தள புலானாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறியவரும்போது 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் இவ்வமைப்பின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.
இச்சம்பவங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேணடும்.
இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் தந்திரமிக்கவர்களாக காணப்படுவதால் சிறுவர்களும் இதுகுறித்து நிதானத்துடன் செயற்பட வேண்டும்' என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
