Saturday, June 28, 2014

25ஆம் திகதி முதல் எனது பேஸ்புக் பக்கத்திற்குள் நுழைய முடியாமல் உள்ளது. பொது பல சேனா ஒணைப்பாளா்.

இலங்கையில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களின் முகநூல் பக்கங்கள் (பேஸ்புக்) நிறுத்தப்பட்டுள்ளன. 

முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாழும் தென்பிராந்தியப் பகுதிகளான அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் கடந்த 15ஆம் திகதி பொதுபலசேனா அமைப்பு பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தது. இவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளில் முஸ்லிம்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்தப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளில் மூவர் பலியாகியதுடன் 75 பேர் காயமடைந்தனர். இதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பொதுபலசேனா அமைப்பு தொடர்ந்தும் கூறிவருகின்றது. 

இந்நிலையில் பொதுபலசேனா அமைப்பிலுள்ள பிரதான அங்கத்தவர்களின் முகநூல் பக்கங்கள் (பேஸ்புக்) தடை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் அவ்வமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே கூறுகையில்;  "கடந்த 25ஆம் திகதி முதல் எனது பேஸ்புக் பக்கத்திற்குள் நுழைய முடியாமல் உள்ளது. எனது பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்
Disqus Comments