நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்த கார்கில்ஸ் வங்கியின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (30) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
கொழும்பு 4, காலி வீதியில் வங்கியின் தலைமையகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கியின் செயற்பாடுகளுக்காக சர்வதேச அமைப்புகளின் பங்காண்மை மற்றும் முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு வங்கிக் கொடுக்கல் - வாங்கல்களில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த வங்கியின் செயற்பாடுகள் அமைந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
