Saturday, June 28, 2014

காற்சட்டைப் பைகளில் தொலைபேசி ஆண்மையை குறைக்கும் - ஆராய்சியில் உறுதி


காற்சட்டை பைகளில் கைத்தொலைபேசியை வைத்தால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்சட்டை பைகளில் கைத்தொலைபேசியை வைத்தால், ஆண்களுடைய விந்தணு பாதிப்பு ஏற்பட்டு தந்தையாகும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. 

இன்றைய நவநாகரீக காலத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்தாத நபரே இல்லை என்று கூறுமளவுக்கு அனைத்து தரப்பினரும் இதை ஒரு ஆறாம் விரல் போன்று பயன்படுத்துகின்றனர்.

செல்போன்கள் வெறும் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட காலம் சென்று தற்போது அது அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் உடையதாக மாற்றமடைந்துள்ளது. இதனால் செல்போன்களில் தான் இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர்.

இந்த நிலையில், எக்ஸிடர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், ஒருவர் தனது காற்சட்டை பையில் வைக்கும் கைத்தொலைபேசியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அவரது விந்தணுக்களைப் பாதிப்பதால் அவர் தந்தையாகும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

எக்ஸிடர் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர்.பியோனா மேத்யூஸ் தலைமையிலான குழு, 1492 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

எனினும் இது தொடர்பான உறுதியான முடிவை தெரிவிக்க முழுமையான ஆய்வை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், கைத்தொலைபேசி கூடுமான அளவு உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

Disqus Comments