விரிவுரையாளர்களின் பாதுகாப்பு கருதி இலங்கையின் ரஜரட்டை பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு பல்கலைக்கழக துணைவேந்தரால் இன்று காலை விடுக்கப்பட்டுள்ளது.
28 மாணவர்கள் விரிவுரைகளில் இருந்து தடுக்கப்பட்டமையை ஆட்சேபித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தமது கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் அவர் நேற்று 
காலை முதல் விரிவுரையாளர்களை நிர்வாக கட்டிடத்துக்குள் தடுத்து 
வைத்துள்ளனர்.
இதனையடுத்தே விரிவுரையாளர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகம் மூடப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
இதேவேளை பல்கலைக்கழக பிரதேசத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
