அளுத்கம மற்றும் தர்ஹாநகரில் இடம்பெற்ற கலவரத்தின் போது
சேதம்விளைவிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக 200
மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன
வீரகோன் இன்று தெரிவித்தார்.இன்று பிற்பகல் களுத்துறை மாவட்டசெயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பேருவளை, களுத்துறை, மத்துகம பகுதிகளில் பாதிக்கப்பட்ட சில கட்டடங்கள் பாதுகாப்பு படையினரால் திருத்திக்கொடுக்கப்படுமெனவும் களுத்துறை மாவட்டசெயலகத்துக்கு ரூபா 50 மில்லியன் ஒதுக்கியுள்ளதாகவும் இராணுவத்துக்கு ரூபா 150 மில்லியன் இராணுவத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.