Monday, June 23, 2014

'வட்டரக்க விஜிதவைப் போன்று இன்னும் 40 தேரர்கள் உள்ளனர்'


வட்டரக்க விஜித தேரர் நாடகமாடி வருகின்றார் என ஆரம்பத்திலிருந்தே பொது பல சேனா தெரிவித்து வருகின்றது. இவரைப் போன்ற மேலும் 40பேர் தொடர்பில் நாட்டு மக்கள் விரைவில் அறிந்துகொள்வர் என்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வட்டரக்க விஜித தேரருக்க பாதுகாப்பு வழங்கி, அரசாங்கம் தவறிழைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

வட்டரக்க விஜித தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டுள்ளார் என்றும் அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றும் ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளார். 
Disqus Comments