தென்னிலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
வன்முறையைத் தூண்டியோர் மற்றும் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினரை பணிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற இனவாத வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தான் ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாக திருமதி. குமாரதுங்க கூறியுள்ளார்.
'பௌத்தத்தின் பெயரால் தமது குறுகிய, தனிப்பட்ட இலக்குகளை முன்னெடுக்கும் வன்முறைத் தீவிரவாதிகளால் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியினால் வன்முறை வெடித்ததாக தோன்றுவதாக ஆரம்பக்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
அதையிட்டு நான் கவலையடைந்துள்ளேன். கிட்டத்தட்ட 18 மாதங்களாக வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விடயங்கள் மற்றும் அப்பட்டமான சட்டமீறல் விவகாரங்களைக் கையாள்வதற்கு சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் தவறியுள்ளமை அதிகளவுக்கு கவலை கொள்ளவேண்டிய விடயமாகும்' என்று சந்திரிகா குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
பன்முகத்தன்மை, ஜனநாயகம், சகல பிரஜைகளுக்கும் பொருளாதார ரீதியிலான சமவுரிமை, சமூக கலாசார அரசியல் ரீதியான வாய்ப்புகளை வழங்குதல் போன்றவற்றில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் உருவாக்குவதற்கான அசாதாரணமான வாய்ப்பை இலங்கை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது அரசாங்கம் ஆத்திரத்தை தூண்டும் நடவடிக்கைகள், இன வன்முறைகளை பல சந்தர்ப்பங்களில் வெற்றிகரமான முறையில் தடுத்து நிறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக ஸ்திரமானதாகவும் பொருளாதார ரீதியில் சுபீட்சத்துடனும் நாடொன்று விளங்குவதற்கு நம்பிக்கை, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் முக்கியமானதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இனமோதல் மற்றும் பயங்கரவாதத்தால் எமது நாட்டு மக்கள் கால்நூற்றாண்டாக மேற்கொண்ட பாரிய தியாகத்தின் பெயரால் இந்த இனவாத, மதவன்முறைகளை நிறுத்துவதற்கு சாத்தியப்படும் சகல வழிகளையும் கைக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றும் வன்முறைகளைத் தூண்டியோர் தாக்குதல்களை மேற்கொண்டோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியிருப்பதுடன் சிறிய தீவிரவாத குழுவினரால் நாடு மற்றொரு உள்நாட்டு யுத்தத்துக்கு செல்வதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.