Tuesday, June 24, 2014

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் பேச்சுகளுக்கு எதிரான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் - வாசுதேவ நாணயக்கார

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான குரோத பேச்சுகளை இந்நாட்டில் தடைசெய்யும் நோக்கில் அமைச்சரவைப்பத்திரமொன்று விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே இந்த அமைச்சரவைப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவின் தலைமையிலான அமைச்சரவை உப-குழு, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு முன்வைத்த ஆலோசனைகளை அங்கீகரித்து விட்டதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்த அமைச்சரவைப் பத்திரம், காழ்ப்புணர்வு பேச்சுகளுக்கு எதிரான தண்டனைக் கோவை சட்ட ஏற்பாடுகளை பொதுச்சட்டத்தின் பகுதியாக்கி, இன மோதல்களையும் அமைதியின்மையினையும் தடுப்பதற்கு முயல்கின்றது.

அச்சு, இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இச்சட்டத்தின் மூலம் தணிக்கைக்கு உள்ளாகலாம். சமுதாயங்களுக்கிடையே காழ்ப்புணர்வை தூண்டியமை நிரூபிக்கப்படின் மறியல் தண்டனை அல்லது தண்டம் இல்லையேல் இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
Disqus Comments