காலியில் நடைபெற்ற, இலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 153 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா
வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுயற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டத்தை தோ்வு செய்தது. முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 9 விக்கட்டுக்களை இழந்து 455 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட போது ஆட்டத்தை இடையில் நிறுத்திக் கொண்டது.. தென்னாபிரிக்கா சார்பாக டியன் எல்கார் 109 ஓட்டங்களையும், ஜேபி டுமினி ஆட்டமிழக்காமல் 100 ஓங்களையும் பெற்றுக் கொண்டனா். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக தில்ருவான் பெரேரா 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.
தனது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 292 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக அணித்தலைவா் அஞ்சலோ மத்திவ்ஸ் 89 ஓட்டங்களையும், உபுல் தரங்க 83 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனா். தென் ஆபிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் நட்சத்திரப் பந்து வீச்சாளா் டெல்ஸ்டைன் 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.
163 ஓட்டங்களுடன் முன்னிலை வகித்த தென் ஆபிரிக்க அணி தனது 2வது இன்னிங்கை 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டபோது ஆட்டத்தை இடை நிறுத்தி இலங்கைக்கு வெற்றி இலக்காக 370 ஐ தீா்மானித்தது. துடுப்பாட்டத்தில் தென் ஆபிரிக்கா அணி சார்பாக அதிரடி ஆட்டநாயகன் டி வில்லியா்ஸ் 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததோடு இலங்கை அணிசார்பாக தில்ருவான் பெரேரா 4 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.
370 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பயணித்த இலங்கை அணி சற்று நேரத்திற்று முன்னா் சகல விக்கபட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை மட்டுமே பெற்று 153 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
போட்டியின் சிறப்பாட்டக் காரராக தென் ஆபிரிக்கா அணியின் நட்சந்திரப் பந்து வீச்சாரளா் டெல் ஸ்டைன் தோ்வு செய்யப்பட்டார். இரண்டு போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் தென் ஆபிரிக்கா முன்னிலை வகிப்பதோடு இரண்டாவது போட்டி எதிா்வரும் 24ம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெறவுள்ள குறிப்பிடத்தக்கது.
