புத்தளம் மதுரங்குளி தொடுவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளியிலிருந்து
முக்குத்தொடுவாய் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்திசையில்
வந்த லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதி நேற்றிரவு 9.45 அளவில்
விபத்திக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார்
சைக்கில் செலுத்துனர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
விபத்து தொடர்பில் லொறியில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகி்ன்றனர்.
