Monday, July 21, 2014

தபால் கட்டணங்கள் அபரிமிதமாக அதிகரிப்பு

இலங்கையில் தபால் கட்டணங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி சாதாரண தபால்களுக்கான முத்திரை கட்டணங்கள் 5 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன.
 
வியாபார கடிதங்களுக்கான கட்டணங்கள் 5 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன என்று தபால் மா அதிபர் ரோஹன அபேசிங்க தெரிவித்துள்ளார்.
 
கடந்த 6 வருடங்களாக தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. எனவே தற்போது இந்த அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானித்ததாக தபால் மா அதிபர் தெரிவித்தார்.
 
இதன்படி பொதிகளுக்கான தபால் கட்டணங்கள் (500 கிராம்) 90 ரூபாவாக இருக்கும், தபால் பைகளுக்கான கட்டணங்கள் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன
Disqus Comments