Monday, July 21, 2014

காசா மீது கடுமையான ஷெல் தாக்குதல்: 40 போ் வரையில் பலி

இஸ்ரேலிய படைநடவடிக்கை தொடங்கிய கடந்த 13 நாட்களில் நேற்றிரவு நடந்துள்ள மிக மோசமான ஷெல் தாக்குதல்களில், காசாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

கிழக்கு காசாவில் ஷெஜாய்யா பகுதியில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன

மேலும் பலரின் சடலங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது

சடலங்கள் வீதியில் வைக்கப்பட்டிருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

கடுமையதான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான இடங்களை ஆம்பியூலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் அச்சம் காரணமாக கால்நடையாகவோ கிடைத்த வாகனங்களில் தொங்கிக்கொண்டோ வெளியேறிவருவதாக காசா நகரில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறினார். 
என்றாலும் இஸ்ரேலிய இழப்புக்கள்  பற்றி இதுவரையும் எந்த விதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments