Monday, July 21, 2014

திருகோண மலையில் நாளொன்றுக்கு சராசரியாக மூவர் தற்கொலை

திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக மூவர் தற்கொலை செய்யும் முயற்சிக்கு தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் கடன்கள் காரணமாகின்றன என்று திருகோணமலை  பொதுவைத்தியசாலைப்பிரிவின் உளநலப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மக்களை ஈர்க்கும் நோக்குடன் நுண் கடன் என்ற வகைக்கடன்களை மக்களுக்கு வழங்குகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கடனுக்கு கூடிய வட்டிகள் அறவிடப்படுகின்றனவென்றும் இக்கடன்களைப்பெற்ற விவசாயிகள், மீன் பிடியாளர்கள் தொழில் நடைபெறாத காலங்களில் கடனை மீளச் செலுத்த முடியாத காரணத்தினால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
நிதி நிறுவனங்களின் இச்செயற்பாடுகள்பற்றி உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென இது தொடர்பில் தனது கண்டனத்தையும் நகர சபை உறுப்பினர் சி. நந்தகுமார் தெரிவித்தார்.
Disqus Comments