தாய்வானில் இடம்பெற்ற விமான விபத்தில் இதுவரையிலும் 51 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் எழுவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்க தகவல்கள் தெரிவித்தனர்.
அவசரமாகத் தரையிறங்கிய டிரான்ஸ்ஆசிய விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தாய்வானில் மாட்மோ சூறாவளித் நேற்று தாக்கியிருந்த நிலையில் கடும் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தலைநகர் தைபேயிலிருந்து பெங்குவை நோக்கி இந்த விமானம் புறப்பட்டது. இந்த நிலையில் அவசரமாகத் தரையிறக்க முயற்சி செய்யப்பட்டபோதே விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.