Thursday, July 24, 2014

இஸ்ரேலியர்களால் சுட்டுக் கொல்லப்படும் பாலஸ்தீனத்தின் அப்பாவி இளைஞன்... (வீடியோ இணைப்பு)

இஸ்ரேலிய வான் தாக்குதலையடுத்து காணாமல் போன தனது குடும்பத்தினரை தேடிச்சென்ற நிராயுதபாணியான பொதுமகன் ஒருவர் பிறிதொரு இஸ்ரேலிய சின்னப்பர் தாக்குதலில் சுட்டுக்குகொல்லப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

காஸா நகரில் அயலிலுள்ள ஷிஜாயியாஹ் பிரதேசத்தில் பலஸ்தீன ஆதரவு சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளரான முஹமட் அப்டெல்லாவால் இந்த வீடியோ காட்சி எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் கடும் வான் தாக்குதலுக்கு உள்ளான பிரதேசத்தில் குறிப்பிட்ட பலஸ்தீன இளைஞருக்கு உதவும் முகமாக அவருடன் தானும் ஏனைய செயற்பாட்டாளர்களும் சென்ற போதே அந்த இளைஞர் பிறிதொரு இஸ்ரேலிய சின்னப்பர் தாக்குதலில் பலியானதாக அப்டெல்லாஸ் கூறினார்.

எனினும் இந்த வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை என அதனை வெளியிட்டுள்ள பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் குறிப்பிட்டுள்ளது


Disqus Comments