Thursday, July 24, 2014

டுபாயில் மாடியிலிருந்து குதித்த இலங்கையா் பரிதாப மரணம்

டுபாய், ரிக்காவிலுள்ள உணவகமொன்றின் நான்காம் மாடியிலிருந்து விழுந்து இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக அல் ராய் டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இக்கட்டிடத்திலிருந்து நபர் ஒருவர் கீழே குதித்ததாக உள்துறை அமைச்சின் செயற்பாட்டு அறைக்கு கிடைக்கபெற்ற அவசர தொலைபேசி அழைப்பை தொடர்ந்து உள்நாட்டு பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது அந்நபர் இரத்தவெள்ளத்தில் தோய்ந்து கிடந்துள்ளார்.


மேற்படி உணவகத்தில்,   ஈரானைச் சேர்ந்த இருவர்,  பங்களாதேஷ் மற்றும் எகிப்தை சேர்ந்த இருவர் உட்பட ஐவர் தொழில்புரிந்து வந்துள்ளனர்.


இந்நபர் திருடுவதற்காக கட்டடத்திற்குள் உள்நுழைந்து மாட்டிகொண்டதாகவும் தப்பிப்பதகற்காகவே கட்டடத்திலிருந்து இவ்வாறு குதித்தாகவும் மேற்படி ஐவரும் தெரிவித்துள்ளனர். இவர்கள் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Disqus Comments