பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அளுத்கம, கொடல்ல
தம்மிக்கா ராம விகாரையில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தம்மிக்க ராம விகாரையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக
பேருவல, வலபன பரமர நியாராம விகாரையில் இருந்து சென்ற பிக்கு ஒருவரே இவ்வாறு
தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் தனது பெற்றோரை கவனித்து கொள்ளுமாறும்
குறித்த பிக்கு இறுதியாக எழுதி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
