கொழும்பில் காதல் ஜோடியொன்றிடமிருந்து கப்பம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு, பெரஹர மாவத்தையில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடியொன்றிடமிருந்து, அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக வழக்கு தொடர்வதாகவும் அவ்வாறு வழக்கு தொடராமலிக்க 4 ஆயிரம் ரூபாவை கப்பமாகத் தருமாறு கோரியே மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் கப்பம் பெற்றுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பொலிஸ் சேவைக்கு தகுதியற்றவர்கள் என்று கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.