Thursday, July 17, 2014

புத்தளம் கல்லடியில் காட்டு யானை தாக்கி ஒருவா் மரணம்

புத்தளம், கல்லடி நெலும்வெவ பிரதேசத்தில் வசித்துவந்த நிமல் ரஞ்சித் (வயது 36) என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை இரவு  சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்,  காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில்  புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments