என்ன தான் ஆப்பிள் போன் வைத்திருப்பது பெருமை என கருதப்பட்டாலும் ஆப்பிள் போன் தான் சிறந்தது என்றால் இல்லை என்பது தான் பதில். இதற்கு வலு சேர்க்கும் வகையில் புதிய Samsung Galaxy 6 மற்றும் Samsung Galaxy 6 edge பல விதத்தில் ஆப்பிள் (Apple IPhone 6) போனை பின்னுக்கு தள்ளுகிறது. இதோ ஒரு சிறு பார்வை
Samsung Galaxy 6 சிறப்பம்சம்
வழக்கமாக புதிய Samsung Galaxy போன்களில் பல அம்சங்கள் இடம் பெறும். ஆனால் Samsung Galaxy 6 இதற்கு மாறாக டிசைன் மற்றும் செயல்பாடுகளில் முக்கியத்துவம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் சில அம்சங்கள் Apple IPhone 6 போனை பின்னுக்கு தள்ளுகிறது.
1. காண்டக்ட் கலர்
நீங்கள் ஒருஒரு காண்டக்ட் நம்பருக்கும் தனித்தனியே கலர் கொடுக்கலாம். போன் வரும் போது அந்த கலர் ப்ளின்க் ஆகும்
2. கேமரா ஆன் வசதி
ஹோம் பட்டனை இரு முறை அழுத்தினால் கேமரா ஆன் ஆகும். Apple IPhone 6 இந்த வசதி இல்லை
3. மூவிங் போகஸ்
படம் எடுக்கும் போது ஒருவர் நகர்ந்தால் போகஸ் நகரும். எனவே போகஸ் மாறாது.
4. விரைவான சார்ஜ்
10 நிமிடம் சார்ஜ் போட்டாலே 4 மணி நேரம் பேசும் வசதி கிடைகிறது
5. டைம்
உங்கள் போன் ஆப் ஆகிருக்கும் போதும் டைம் பார்க்கும் வசதி இருக்கிறது.
6. மல்டி அப்ப்ளிகேசன்
ஒரே நேரத்தில் இரண்டு அப்ப்ளிகேசன்கள் இயக்கலாம்.
7. ஸ்மார்ட் மேனேஜர்
ஸ்மார்ட் மேனேஜர் மூலம் உங்கள் போனின் தேவை இல்லாமல் இருக்கும் பைல்களை அழிக்கலாம்.வேற அப்ப்ளிகேசன்கள் தேவை இல்லை
8. இதய துடிப்பு
Samsung Galaxy 6 மூலம் உங்கள் இதய துடிப்பின் அளவை அறியலாம்.
மேற்சொன்ன ஏதும் Apple IPhone 6 போனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Samsung Galaxy 6 மற்றும் Samsung Galaxy 6 Edge ஒரு புதிய அனுபவத்தை உருவாக்கும் என்பதில் மாற்றம் இல்லை.
நன்றி : கணினி தமிழன்