Wednesday, May 20, 2015

கரம்பை வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

(முஹம்மது முஸப்பிர்) புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரம்பை உடப்பு மணியகாரன் வீதியின் ஒற்றைப்பனைப் பகுதியிலுள்ள நான்கரை கிலோ மீற்றர் வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி, பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் செவ்வாய்க்கிழமை (19) காலை 7.15 மணி முதல் காலை 8.15 வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். 

மணியகாரன் வீதியில் கரம்பை முதல் வட்டவான் வரையும் பத்துளுஓயா முதல் உடப்பு வரையுமான வீதி புனரமைக்கப்பட்டுள்ள போதிலும் ஒற்றைப் பனை பகுதி மாத்திரம் இது வரை புனரமைக்கப்படாமல் உள்ளது. இதனால்,  பாடசாலை மாணவர்களும் பயணிகளும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர். 

வீதியில் அதிகளவு பள்ளமும் குழியும் காணப்படுவதால் மழைக் காலங்களில் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,  இவ்வீதியின் நான்கரை கிலோ மீற்றர்  தூரமுள்ள வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Disqus Comments