புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்களிடம் கருத்துக்களைப் பெற நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் 27ம் திகதி வௌியிடப்படவுள்ளது.
அந்த அறிக்கையை மூன்று மொழிகளிலும் இணையத்தில் வௌியிட தீர்மானித்துள்ளதாக, குறித்த குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த குழுவின் அறிக்கையை எதிர்வரும் 27ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்