கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் வௌ்ளநீரால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இன்று (24) மற்றும் நாளை (25) கணக்கெடுக்கப்படவுள்ளதாக, கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்பொருட்டு விஷேட குழுவொன்று வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக, கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கண்ணங்கர குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதிகாரிகள் வரும் வேளை தமது வீடுகளில் இருக்குமாறும் மக்களிடம் அவர் கோரியுள்ளார்.
இதன்படி, வௌ்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இந்தக் கணக்கீட்டின் பின்னர் மதிப்பிடவுள்ளதாகவும், சுனில் கண்ணங்கர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.